Saturday, March 7, 2015


கோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் ஹன்சிகா, தற்போது விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருவது அனைவரும் தெரிந்ததே. ஸ்ரீதேவியின் மகளாக, இளவரசியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.

இதுவரை நடித்த ஒருசில வரிகளில் மட்டும் வசனம் பேசி நடித்த ஹன்சிகாவுக்கு புலி இயக்குனர் சிம்புதேவன், அரைப்பக்கம் தமிழில் வசனத்தை எழுதி கொடுத்துவிட்டு, அதை மனப்பாடம் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டாராம். பரிட்சைக்கு பள்ளி மாணவிகள் படிப்பதுபோல, இரண்டு மணி நேரம் டென்ஷனோடு உட்கார்ந்து மனப்பாடம் செய்துவிட்டு அந்த அரைப்பக்க வசனத்தையும் முழு எக்ஸ்பிரஷனோடு பேசி நடித்ததாகவும்,  தன்னுடைய பெர்மான்ஸை பார்த்து இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

அரண்மனை' படத்திற்கு பின்னர் தனக்கு நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்த படம் 'புலி' என்று கூறிய ஹன்சிகா, தனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த படம் மூன்றாம் பிறையின் இந்த ரீமேக் சத்மா' படம் என்றும், அந்த படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பை பலமுறை பார்த்து மகிழ்ந்த தனக்கு தற்போது அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகவும் சந்தோஷமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment