Tuesday, March 3, 2015


அஜீத் நடித்த பில்லா, ஆரம்பம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது 'யட்சன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் மிக அற்புதமாக வந்துள்ளதாகவும்  இந்த படத்தின் இசை வெளியீடு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் யூடிவி தனஞ்செயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யா, கிருஷ்ணா, தீபாசந்நிதி, ஸ்வாதி ரெட்டி, ஒய்.ஜி.மகேந்திரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஆர்யா தல அஜீத்தின் ரசிகராகவும், ஒய்.ஜி.மகேந்திரா அரசியல்வாதியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கரின் 'ஐ' படத்திற்கு பின்னர் பிரபல எழுத்தாளர்கள் சுபா' இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே இரட்டையர்கள்தான் 'ஆரம்பம்' படத்திலும் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment