Tuesday, March 3, 2015


அஜீத்துடன் அனுஷ்கா நடித்த 'என்னை அறிந்தால்' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து அனுஷ்காவின் பிரமாண்ட சரித்திர திரைப்படமான 'ருத்ரம்மாதேவி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்தியாவில் உருவாகும் முதல் ஸ்டிரியோஸ்கோப் 3D படமான இந்த படத்தின் டிரைலரும் நேற்றும் 3Dயில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் அனுஷ்கா உள்பட படக்குழுவினர் அனைவரும் வருகை தந்திருந்தனர். 14ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய சக்தியாக இருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை வீரமுடன் எதிர்த்து போராடிய ருத்ரம்மாதேவி என்ற ராணியின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ருத்ரம்மாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படம் குறித்து அனுஷ்கா கூறியபோது, 'இந்த படத்தில் நடித்த அனுபவம் தனக்கு பிரமிப்பாக இருந்தது என்றும் இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் குணசேகருக்கு தான் என்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அருந்ததி' படத்தை அடுத்து இந்த படம் தனக்கு பெரும்புகழை பெற்றுத்தரும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் தமிழ் உரிமையை இராம.நாராயணன் அவர்களின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரூ.10 கோடிக்கு கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அனுஷ்கா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், நாசர் மற்றும் இளையராஜாஆகிய கோலிவுட் பிரபலங்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளதால் பெரும் தொகைக்கு இந்த படம் விற்பனையாகி உள்ளது.

அல்லு அர்ஜூன், ராணா, அனுஷ்கா,சுமன், கேதரின் தெரசா, நித்யாமேனன்,பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை அஜய்னன் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இம்மாதம் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment