‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சியாகcவும், ‘கஹானி’ படத்தில் கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்து ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை வித்யா பாலன்.
இவர் தற்போது ஹமாரி அதூரி கஹானி ( Hamari Adhuri Kahaani) படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி வெளியாக உள்ளது.
அதே நாளில் கங்கனா ரனாவத் நடித்த தாணு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் (Tanu Weds Manu Returns) படமும் ரிலீஸாக உள்ளது. குயின் படத்தில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பாலிவுட் ரசிகர்கர் அனைவரையும் கவர்ந்தவர் கங்கனா. இவர் கவர்ச்சிக்கும் பஞ்சம் வைப்பதில்லை.
பாலிவுட் திரையுலகத்தை, வேறொரு உச்சத்திற்கு கொண்டு சென்றதில், இந்த இரண்டு நடிகைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இந்நிலையில், இவர்கள் நடித்த படங்கள், ஒரேநாளில் வெளியாக உள்ளது அவர்களது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment