சினிமாவில் ‘செக்ஸ்’ முக்கியமான விஷயமாக இருக்கிறது என்று ராதிகா ஆப்தே கூறினார். இவர் பிரகாஷ்ராஜுடன் ‘தோனி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் அழகு ராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. குளியலறையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டு இருந்தது. ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப்தே மறுத்தார்.
இந்த நிலையில் ஹாலிவுட் படமொன்றில் நிர்வாண காட்சியொன்றில் அவர் நடித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலாடை இன்றி அரை நிர்வாணமாக தோன்றுகிறாராம். இதனை ராதிகா ஆப்தேவே தெரிவித்து இருந்தார். கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன் என்றும் இந்தியாவில் அந்த காட்சியை நீக்கி விட்டுத்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். நிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, செக்ஸ் என்பது சினிமாவில் முக்கிய விஷயமாக இருக்கிறது. வியாபாரமாக கூடிய விஷயமாகவும் இருக்கிறது. சமூகத்தில் அதை பேசக்கூடாத விஷயம் என்று மறைத்து வைத்துள்ளனர். இதுவே அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது என்றார்.
Monday, March 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment