குத்துப்பாடலுக்காக சிம்புவுடன் இணையும் நடிகை
சுப்பிரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற பல படங்களில் நடித்த நடிகை ஸ்வாதி ரெட்டி தற்போது பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம் அப்பாடக்கர் படத்திற்காக அவர் ஒரு குத்துப்பாடலை பாடவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்து வரும் அப்பாடக்கர் படத்தில் ஒரு குத்துப்பாடலை இணைக்க இயக்குனர் சுராஜ் முடிவு செய்து அதை இசையமைப்பாளர் தமனிடம் தெரிவித்துள்ளார். எஸ்.தமன் ஒரு குத்துப்பாடலை கம்போஸ் செய்து இந்த பாடலை நடிகை ஸ்வாதி மற்றும் சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என கருதி இருவரையும் பாட வருமாறு அழைத்துள்ளார்.
ஸ்வாதி ரெட்டி இந்த பாடலை பாடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிம்புவின் தேதி கிடைத்தவுடன் அடுத்தவாரம் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குத்துப்பாடல் ஜெயம் ரவி-த்ரிஷாவுக்கா? அல்லது ஜெயம் ரவி -அஞ்சலிக்கா? என்ற சஸ்பென்ஸை தெரிவிக்க இயக்குனர் சுராஜ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிம்பு, ஸ்வாதி இணைந்து பாடவுள்ள இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment