Monday, March 23, 2015


வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தின் உரையாடல் பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளில் வெங்கட்பிரபு பிசியாக ஈடுபட்டு வருகிறார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பினும் இந்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக சூர்யா மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் பணியாற்றியுள்ளனர். இருவரும் டப்பிங் தியேட்டர் முன்னிலையில் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சூர்யாவின் அதிகாரபூர்வ சமூக இணையதள பக்கத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

சூர்யா ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா, நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பார்த்திபன், சமுத்திரக்கனி, கருணாஸ், சந்தானபாரதி, வித்யூலேகா ராமன், மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், பிரவீண் எடிட்டிங்கும் செய்கின்றனர். சூர்யாவின்  2D நிறுவனம் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்காக இன்னும் பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில்  அடுத்து சூர்யா ஹைக்கூ, மற்றும் 24 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கின்றார்.

0 comments:

Post a Comment