Monday, March 23, 2015

 சிம்புவுக்கு என்னதான் ஆச்சு?
காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்திருந்தாலும் சமீபகாலமாக சிம்பு ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார். வாலு, இது நம்ம ஆளு ரிலீஸ் தாமதம், நண்பர்கள் என்று எண்ணிய சில நடிகர்கள் தன்னைப்பற்றி விமர்சித்ததையறிந்து ஷாக் என நெருக்கடிகளில் சிக்கியதால் மனம் புழுங்கி இருக்கிறார். தனது எதிரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் தனிப்பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவுடன் இதற்காக கைகோர்த்திருக்கிறார். யுவனும் சமீபத்தில் ‘மாஸ்'  படத்தில் தனக்கு பதிலாக வேறு ஒரு இசை அமைப்பாளரை பயன்படுத்தி பாடல் பதிவு செய்த தயாரிப்பு தரப்பின் போக்கினால் வருத்தம் அடைந்திருக்கிறார்.

இது பற்றி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் சிம்பு, ‘இப்போதெல்லாம் பொறாமையும், வெறுப்புணர்வும் அதிகரித்துவிட்டது. எதிர்மறை மனம் படைத்தவர்கள், மலிவான குணம் கொண்டவர்கள், முதுகில் குத்துபவர்கள், பொறாமைக்காரர்கள், கள்ளத்தனம் நிறைந்தவர்களுக்காகவே யுவனுடன் இணைந்து ஒரு பாடல் ஆல்பம் உருவாக்கி வருகிறேன். சீக்கிரமே அது வெளிவரவிருக்கிறது. இதை மேற்குறிப்பிட்ட குணம் கொண்டவர்களுக்கு அர்ப்பணிக்க உள்ளேன். இந்த பாடலாவது அப்படிப்பட்டவர்களின் எண்ணத்தை மாற்றும் என்ற சிறிய நப்பாசையின் தொடக்கமே இது'  என குறிப்பிட்டிருக்கிறார். ' சிம்புவுக்கு அப்படி யார்தான் எதிரி, அவருக்கு என்னதான் ஆச்சு, தொடர்ந்து டுவிட்டரில் யாரை பற்றி பேசி வருகிறார்'  என கோலிவுட்டார் கேட்க தொடங்கி உள்ளனர்.

0 comments:

Post a Comment