
மீண்டும் படங்களில் நடிக்க எண்ணியபோது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதா? பொழுதுபோக்கு படத்தில் நடிப்பதா? ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது.
பெண்ணுக்கும் முக்கியத்துவம் தருவதுடன் நடிப்பை வெளிப்படுத்தும் கதையாக ‘ஷி டாக்ஸி‘ மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதுதான் பொருத்தமானது என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். கார் டிரைவர் வேடம் ஏற்றிருக்கிறேன். இதற்காக மைசூர் தொடங்கி பல்வேறு ஊர்களுக்கு சுற்றி படப்பிடிப்பில் பங்கேற்றேன். திருமணமாகிவிட¢டால் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடியாது. இப்போது அப்படி இல்லை. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன்.தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களில் நடிப்பது பற்றி கேட்கின்றனர். வருடத்து ஒரு படம் வேற்று மொழியில் செய்யலாம் என்று எண்ணிஇருந்தேன். தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறேன். மலையாளம் தவிர தமிழ் உள்ளிட்ட வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். என் வசதிக்கு பொருத்தமான மலையாள இடத்தில் மட்டுமே பணியாற்ற நினைக்கிறேன். இவ்வாறு காவ்யா மாதவன் கூறினார்.
0 comments:
Post a Comment