பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார் லட்சுமி மேனன். மேல்படிப்புக்காக சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் பரவியது.அவர் கூறியது:மேல்படிப்புக்காக பெங்களூரு செல்வதால் நான் சினிமாவுக்கு முழுக்கு போடுவேன் என சிலர் சொல்கிறார்கள். எதிர்காலம் எதுவும் நமது கையில் இல்லை. அது பற்றி நான் யோசிக்கவும் இல்லை. பள்ளி படிப்பின்போதே நடிப்பிலும் பின்னணி பாடுவதிலும் கவனமாக இருந்தேன். இனியும் அப்படித்தான். பாடிக்கொண்டே நடிப்பேன். நடித்துக்கொண்டே படிப்பேன். அதனால் நான் சினிமாவிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. ' கொம்பன்' படம் வரும் 2ம் தேதி ரிலீசாகிறது. தொடர்ந்து பல கதைகள் கேட்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம் கதைகள் கேட்டு, படங்கள் தேர்வு செய்வேன்.
0 comments:
Post a Comment