Wednesday, March 25, 2015

ரஜினிக்கு ஆதரவாக விநியோகஸ்தர்களுக்கு கமல் பதிலடி - Cineulagam
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் ரஜினி மற்றும் கமல் தான். தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக நம்பர் 1 என்ற இடத்தை இவர்கள் மட்டுமே பகிர்ந்து வருகின்றனர்.
இன்று உத்தம வில்லன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல் ரஜினிக்கு ஆதரவாக பதில் அளித்தார்.
இதில் ‘சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை.
பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அது போல்தான் இதுவும்.’என்று ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

0 comments:

Post a Comment