Wednesday, March 25, 2015

இளைய தளபதியை புகழ்ந்த த்ரிஷா - Cineulagam
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடன் நடித்த அனைத்து நடிகர்களை பற்றியும் மனம் திறந்துள்ளார்.
இதில் நடிகர் விஜய்யை குறிப்பிடுகையில் ‘விஜய்யின் சண்டைக்காட்சிகள், டயலாக் பேசும் விதம் என்னை மிகவும் கவரும், அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்று கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
த்ரிஷா, விஜய்யுடன் ‘திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment