ரஜினியின் இமேஜை இன்னும் இன்னும் என்று சகதியில் போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே! என்ன செய்வது? இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? என்று அவரும் பல வழிகளில் முயன்றாலும் எல்லாமே லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒருவரால் நாசமாகும் போல தெரிகிறது. கடந்த பல நாட்களாக நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் இந்த விவகாரத்தை மிகவும் அக்கறையாக டீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று சென்னையில் கூடிய மிக முக்கியமான கூட்டு பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் ஒரு முடிவை எட்டியிருந்தார்களாம்.
சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தர்கள் ஒரு புறமும், ராக்லைன் வெங்கடேஷ் மறுபுறமும் அமர்ந்திருக்க, பேச்சு வார்த்தையும் நஷ்ட தொகைக்கான பேரமும் விறுவிறுவென நடந்ததாம். பதினாறு கோடியிலேயே நின்று கொண்டிருந்த விநியோகஸ்தர்கள் மெல்ல மெல்ல இறங்கி பத்து கோடிக்கு வந்திருந்தார்களாம். தியேட்டர் வட்டாரத்திற்கு ஒன்பது கோடியே எழுபது லட்சம் தரவேண்டியிருப்பதால் முதலில் அந்த கடனை அடைத்துவிடலாம். எங்கள் நஷ்டத்தை அடுத்து வரும் ரஜினி படத்தில் சரி செய்து கொடுங்கள் என்று இவர்கள் கேட்க, பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்ததாம்.
பத்து கோடியை காலையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கிளம்பி போனாராம் ராக்லைன். இன்று காலை பணத்திற்காக போனால், ‘இந்த நஷ்டத்தொகை தமிழ்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விநியோகஸ்தர்களுக்கும் சேர்த்துதான்’ என்று ராக்லைன் வெங்கடேஷ் சொல்ல, பேரதிர்ச்சியானார்களாம் பஞ்சாயத்தார் அத்தனை பேருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பரே இல்லாத உங்களுக்காக நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தியது உங்களுக்காக அல்ல. ரஜினி சாருக்காகதான். இனிமே நாங்க அவருகிட்டேயே பேசிக்கிறோம் என்று இவர்கள் திரும்பியதாக கேள்வி.
பிரச்சனையை அடக்க முன் வராமல் பிரச்சனையை எழுதும் ஊடகங்களை அடக்க துடிக்கும் ராக்லைன் வெங்கடேஷால் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறாரோ ரஜினி?
.jpeg)
0 comments:
Post a Comment