நடந்து முடிந்த சுப்பர்சிங்கர் போட்டியில் மக்களின் வாக்குகள் மூலமே போட்டியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்வது வழமை.அதுபோலவே இம்முறையும் அறிவிக்கப்பட்டது. உலகில் வாழும் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வாக்களித்தனர் தாம் விரும்பும் போட்டியாளரை வெற்றியடைய வைக்கவேண்டும் என்று.
அதன் அடிப்படையில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா மக்கள் மத்தியில் இடம் பிடித்து கூடுதலான வாக்கினை பெற்றதால் மனம் உடைந்த விஜய் ரீவியும் நடுவர்களும் விதிமுறையினை மாற்றி வாக்கு முடிவுகளை அறிவிக்காது முடிவினை அறிவித்து ஜெசிக்காவுக்கு இரண்டாம் இடம் வழங்கியது அனைவருக்கும் தெரிந்த விடையம். ஆனால் அனைவரும் சமுகதளங்களில் இதுபற்றி எழுத ஆரம்பித்ததும் மரியாதை கெட்ட விஜய் ரீவி புதிதாய் ஒரு கதையினை உருவாக்கி இன்று தனது நிகழ்வில் அறிவித்தது.
அதன் அடிப்படையில் மக்களின் வாக்கு 50% நடுவர்களின் வாக்கு 50% என்ற வகையில் தான் முடிவு அறிவிக்கப்பட்டதாம். மக்களின் வாக்கு படி ஜெசிக்கா தான் அதிக வாக்கு பெற்றவராம் அவர் பெற்ற வாக்கு 2601535 என கூறி தன் பொய் முகத்தை கிழித்தெறிய ஒரு நாடகம் போட்டுநடத்திக்கொண்டு இருக்கின்றது.
இதனை ஏன் முதலில் அறிவிக்கவில்லை. போட்டி நடத்தமுன் சொல்லப்பட்ட விதிமுறை ஒன்று.போட்டி நடந்து முடிந்தபின் சொல்லப்படும் விதிமுறை வேறு ஒன்று. மக்களையும் ஜெசிக்காவையும் ஏன் ஏமாற்றியது விஜய் ரிவி..?ஈழத்தமிழர் என்பதால் தானோ என சந்தேகம் கொள்ளவேண்டி இருக்கின்றது.கடந்த முறை போட்டிகளை நினைவு படுத்தினால் இப்படி எதுவும் நடக்கவில்லை.மக்கள் ஒருபோதும் இதனை ஏற்கமாட்டார்கள். எம் எதிர்ப்பினை காட்ட நாம் இந்த செய்தியினை அனைவரும் பகிர்ந்து எம் எதிர்ப்பினை தெரிவிப்போம்.

If it is true fact , I could say that these kind of things happen because of kind of RACISM. I hardly regret that.
ReplyDelete