விஜய் இடத்தை பிடித்தார் ரவிதேஜா
விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'ஜில்லா' என்பது அனைவரும் தெரிந்ததே. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால்,நடிப்பில் உருவான இந்த படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்று கொடுத்தது.
இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடந்த சில நாட்களாக பேச்சு நடத்தி வரப்பட்டு தற்போது இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த வேடத்தில் நடிக்க பல தெலுங்கு முன்னணி நடிகர்கள் போட்டியிட்ட நிலையில் ரவிதேஜாவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. மேலும் மோகன்லால் நடித்த வேடத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு படவுலகின் பிரபல இயக்குனர் வீரு பொட்ல இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சரியான டைட்டில் குறித்து இயக்குனர் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜில்லா படத்தில் காஜல் அகர்வால் நடித்த வேடத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment