பாஃப்டா என்ற பெயரில் புதிய திரைப்பட கல்வி அகாடமி சமீபத்தில் தொடங்கப்பட்டது. மோசர் பேயர், யுடிவி நிறுவனங்களின் தமிழக நிர்வாகியாக இருந்த தனஞ்செயன் இந்த புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்கள்.
மியுசிக் அகாடமியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான விழாவில் இயக்குநர்கள் மகேந்திரன், கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், மனோபாலா, நாசர், கார்த்திக் சுப்புராஜ், கே.ராஜேஷ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்கள்.
இவ்விழாவில் பாக்யராஜ் பற்றி மனோபாலா சொன்ன ஒரு விஷயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதோடு அங்கிருந்தவர்கள் எல்லோரும் கைத்தட்டிகொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. அப்படி என்ன அவர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீங்க இல்லையா..?
அதாவது சில வருடங்களுக்கு முன்பு தேவர் பிலிம்சுக்கு கதை சொல்லப் போயிருந்தாராம் கே.பாக்யராஜ். சின்னப்பா தேவர் கார்ல ஏறிக்குங்க. அவர் ஸ்டூடியோவுக்கு போய் சேர்றதுகுள்ள கதையை சொல்லிடுங்க.
அதாவது சில வருடங்களுக்கு முன்பு தேவர் பிலிம்சுக்கு கதை சொல்லப் போயிருந்தாராம் கே.பாக்யராஜ். சின்னப்பா தேவர் கார்ல ஏறிக்குங்க. அவர் ஸ்டூடியோவுக்கு போய் சேர்றதுகுள்ள கதையை சொல்லிடுங்க.
அதுல கடவுள் பக்தி இருக்கணும். பெண்கள் சென்ட்டிமென்ட் இருக்கணும். ஒரு சஸ்பென்சும் இருக்கணும் என்பது கே.பாக்யராஜுக்கு இடப்பட்ட கட்டளை. கார்ல ஏறி ஒரு நிமிஷத்துக்குள் கதையை சொல்லி முடித்திருந்தார் அவர். எப்படி தெரியுமா?
கடவுளே… யார் இந்தப் பெண்ணைக் கற்பழித்தது..?
கடவுளே… யார் இந்தப் பெண்ணைக் கற்பழித்தது..?
இதுதான் அவர் சொன்ன ஒரு வரிக்கதை. கடவுளே-வில் கடவுள் வந்துட்டாரா? யார் இந்த பெண்ணை-யில் சஸ்பென்ஸ் வந்துருச்சா? கற்பழித்தது- வில் சென்ட்டிமென்ட் இருக்கா? அதுதான் பாக்யராஜ் என்று மனோபாலா சொல்ல, அரங்கத்தில் எழுந்த கைதட்டல்கள் அடங்க வெகு நேரம் ஆனது.

0 comments:
Post a Comment