கொம்பையா பாண்டியனை ஏற்றுக்கொண்டது ஏன்? கார்த்தி
கார்த்தி நடித்த கொம்பன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றதை இந்த படத்தில் அடுத்து தன்னுடைய கேரக்டர் குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
'பருத்தி வீரன்' படத்திற்கு பின்னர் தனக்கு பல கிராமத்து பின்னணி கொண்ட கேரக்டர் வந்ததாகவும், ஆனால் அந்த கேரக்டர்கள் அனைத்துமே பருத்து வீரனின் பாதிப்பில் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறிய கார்த்தி, கொம்பன் படத்தின் கொம்பையா பாண்டியன் என்ற கிராமத்து கேரக்டரை கேட்டதும் பருத்தி வீரனில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த கேரக்டர் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் உள்ள உணர்ச்சி போராட்டம்தான் முக்கிய கதை என்றும், தனக்கு தெரிந்து இதுபோன்ற ஒரு அழுத்தமான மாமனார்-மருமகன் திரைக்கதை தமிழ்சினிமாவில் வந்ததில்லை என்றும் கூறினார்.
மேலும் இந்த படத்தில் ராஜ்கிரணுக்கும் தனக்கும் கனமான பாத்திரங்கள் அமைந்துள்ளதாகவும் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் ஹீரோயின் லட்சுமி மேனன், உண்மையில் நகரத்து பெண்ணாக இருந்தாலும், கிராமத்து பெண் கேரக்டருக்கு மிக பொருத்தமாக உள்ளார். அதனால்தான் அவருக்கு பெரும்பாலும் கிராமத்து பெண் கேரக்டர் அமைவதாக தெரிவித்தார்.
இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது தன்னுடைய கெட்டப்பை பார்த்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சிங்கம் படத்தில் பார்த்த சூர்யா போலவே இருப்பதாக தெரிவித்ததாகவும் கார்த்தி கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment