Saturday, March 7, 2015


சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தின் சிங்கிள் டிராக் 'டண்டனக்கா' பாடல் மற்றொரு டங்காமாரி பாடலைப்போல பயங்கர ஹிட்டாகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 12ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் 'ரோமியோ ஜூலியட்' இசை வெளியீட்டு நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் இசை வெளியீட்டு விழா தேதியினை தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியதோடு, டண்டனக்கா பாடலை சூப்பர் ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். செளந்திரராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். லக்ஷ்மண் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment