Saturday, March 7, 2015


'என்னை அறிந்தால்' படத்தின் வெற்றி மற்றும் குட்டித்தல'யின் வரவு ஆகியவற்றால் உற்சாகமாக இருக்கும் தல அஜீத், 'தல 56' படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே கொல்கத்தாவில்தான் விஜய் நடித்த 'கத்தி' படப்பிடிப்பும் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வீரம் என்ற வெற்றி படத்தை கொடுத்த சிறுத்தை சிவா தல 56' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். தளபதி நடித்த 'கத்தி'யின் ஹிட்டுக்கு பிறகு தற்போது 'தல' படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் இந்த படத்தையும் தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் கடைசி கட்ட பரிசீலனையில் இருப்பதாகவும், இருவரில் ஒருவர் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வீரம் படத்தை அடுத்து மீண்டும் தல'யுடன் சேர்ந்து காமெடி செய்யவிருக்கின்றார் சந்தானம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment