ரஜினிக்கு பதிலாக சம்பந்தியை இணைத்துக்கொண்ட தேசியகட்சி
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பாலிவுட் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் அந்த கட்சியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட கோலிவுட்டின் திரை நட்சத்திரங்களான நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் பாரதிய ஜனதாவின் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா பாஜகவில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று கோவையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பாஜக தேசிய தலைவர் அமீத் ஷா முன்னிலையில் கஸ்தூரி ராஜா தன்னை பாரதிய ஜனதாவில் இணைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியை பாரதிய ஜனதாவில் சேர்க்க அக்கட்சியின் தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் முயற்சித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார். இந்நிலையில் ரஜினியின் சம்பந்தியை பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment