Saturday, March 7, 2015


சரத்குமார் நடித்த சண்டமாருதம் சமீபத்தில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் மூன்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், அதில் ஒரு படத்தை பிசாசு இயக்குனர் மிஷ்கின் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மிஷ்கின் இயக்கவுள்ள படத்தில் இதுவரை ஏற்காத முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

மேலும் சண்டமாருதம் உள்பட சரத்குமார் நடித்த மகாபிரபு, ஏய், சாணக்யா ஆகிய படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சரத்குமார் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர சமுத்திரக்கனி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ள ஒரு படத்திலும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் சரத்குமார், மூன்றையும் இவ்வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்து ஹாட்ரிக் வெற்றியை பெற திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment