Tuesday, March 24, 2015

சூர்யா பட கால்ஷீட்டை  தனுஷுக்கு தந்தார் எமி
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்த படம் ‘வேலை இல்லா பட்டதாரி‘. இப்படம் ஹிட்டானது. இந்நிலையில் இதன் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கின்றனர். விஐபி படத்தின் 2ம் பாகமாக உருவாகும் இதில் தாடி, மீசை இல்லாமல் தனுஷ் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில் இதுபற்றி தனுஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் கூறும்போது,‘விஐபி பட குழுவின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்கியது. உங்கள் ஆதரவு தர கேட்கிறேன். இப்படம் விஐபி படத்தின் 2ம் பாகம் இல்லை‘ என்றார். ஷங்கரின் ஐ படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகும் ‘மாஸ்'  படத்தில் எமி ஜாக்சன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன பிறகு தனது காட்சிகள் குறைக்கப்பட்டதாக புகார் கூறினார் எமி. பின்னர் அப்படத்திலிருந்து வெளியேறினார். அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் பிரணிதா நடிக்கிறார். மாஸுக்கு கொடுத்த கால்ஷீட்டையே தனுஷ் படத்துக்கு வழங்கியுள்ளாராம் எமி.

0 comments:

Post a Comment