Tuesday, March 24, 2015

விளம்பரங்களில் கோடிகளை அள்ளும் ஹீரோக்கள்
ஸ்டார் அந்தஸ்து பெற நடிகர், நடிகைகள் துடிப்பது பட வெற்றியை குறிவைத்து மட்டுமல்ல மற்றொரு லாப நோக்கமும் அதில் உள்ளது. முன்னணி பட்டியலில் இடம் பிடித்தால் அவர்களை தேடி பிராண்டட் விளம்பர கம்பெனிகள் படை எடுப்பதுடன் கோடிகளில் சம்பளம் கொட்டிக்கொடுக்கவும் தயாராக உள்ளன. விஜய், சூர்யா, திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அசின், இலியானா, காஜல் அகர்வால் போன்ற கோலிவுட் நட்சத்திரங்களும், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான், அக்ஷய் குமார், கரீனாகபூர், கேத்ரினா கைப், கஜோல், அலியாபட் போன்ற பாலிவுட் ஸ்டார்களும் கமர்ஷியல் பிராண்ட்களுக்கு தூதர்களாக பொறுப்பேறு நடித்து கோடிகளில் குளிக்கின்றனர். 1 கோடி முதல் 5 கோடி வரை இவர்களுக்கு சம்பளம் பேசப்படுகிறது.தற்போது ஆன் லைன் வர்த்தக மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் நடிகர்களின் சம்பள டிமாண்டும் வானத்தை எட்டிவிட்டது. சமீபத்தில் பிரபலமான ஒரு வர்த்தக ஆன்லைன் நிறுவனம் ஆமிர்கானை தங்கள் நிறுவனத்தின் தூதராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்காக ஆமிர்கான் 20 கோடி சம்பளம் நிர்ணயித்திருக்கிறார். ஏற்கனவே இவர் நிறைய கமர்ஷியல் விளம்பரங்களில் நடித்திருந்தபோதும் இவ்வளவு பெரிய தொகையை முதன்முறையாக இப்போதான் பெறுகிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம். ரஜினி, கமல் அஜீத் தங்களின் ஸ்டார் அந்தஸ்த்தை பயன்படுத்தி இதுவரை கமர்ஷியல் தூதர்களாக முத்திரை குத்திக்கொள்ளாமல் பெயரை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment