Tuesday, March 24, 2015


கோலிவுட்டுக்கு வரும் மகேஷ்பாபுவின் சர்ச்சை படம்
டோலிவுட்டுக்கு குறிவைக்கும் கோலிவுட் ஹீரோக்களுக்கு போட்டியாக கோலிவுட் மீது டோலிவுட் ஹீரோக்கள் குறி வைத்துள்ளனர். ‘ரட்சகன்‘ படத்தில் நடித்த நாகார்ஜூனா நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி நடிக்கும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அதேபோல் ராம் சரண் தனது தெலுங்கு படங்களை தமிழில் டப்பிங் செய்ய அனுமதி வழங்கி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து மகேஷ் பாபு கோலிவுட் பக்கம் பார்வையை திருப்பி இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த நம்பர் 1 என்ற படம் தமிழில் ‘மகேஷ்பாபு இன் நம்பர் 1‘ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. இதில் கீர்த்தி சனோன் ஹீரோயின். இதில் மகேஷ்பாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் அவரது மகன் கவுதம் நடித்திருக்கிறான். நாசர், சாயாஜி ஷின்டே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு. தேவி ஸ்ரீபிரசாத் இசை. சுகுமார் இயக்கம். ஏ.என்.பாலாஜி தயாரிப்பு. கோவா தவிர லண்டன், கனடா, அமெரிக்கா போன்ற இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவின் பின்னால் நாய் போல் கீர்த்தி மண்டியிட்டு செல்வது போல் இடம்பெற்ற காட்சிக்கு நடிகை சமந்தா எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

Post a Comment