Tuesday, March 24, 2015


ஆக்ஷன் சினிமா பிரியர்களுக்கு விருந்து படைக்கும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்‘ படத்தின் 7ம் பாகம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் அடுத்த மாதம் 2ம் தேதி ரிலீசாகிறது. யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிடும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்களில் பால் வாக்கர் நடித்திருக்கிறார். இதிலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்தபோது, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் அவர் இறந்துவிட¢டார். இதையடுத்து படத்தின் கதைய¤ல் சிறு மாற்றங்கள் செய்து படமாக்கியுள்ளனர். வின் டீசல், ட்வைன் ஜான்ஸன், மைக்கேல் ராட்ரிகுவெஸ் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வான் இயக்கியுள்ளார். த்ரில்லான ஆக்ஷன் காட்சிகள்தான் இந்த படத்தின் ஹைலட். அந்த காட்சிகளை ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் காட்டும் ஒளிப்பதிவு முந்தைய பாகங்களில் பிரபலம். அதே போன்ற த்ரில் உணர்வை இந்த படமும் அளிக்கும் என¢கிறார் டைரக்டர் ஜேம்ஸ் வான். 

0 comments:

Post a Comment