நெருக்கமான காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நய்யாண்டி படத்தில் வம்பு செய்தார் நஸ்ரியா. இது சர்ச்சையானது. அதேபோல் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று சில ஹீரோயின்கள் முரண்டு பிடிப்பதுண்டு. இது இயக்குனர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது. ‘தோனி‘, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா‘ படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தியில் ‘ஹன்டர்‘ படத்தில் படுகவர்ச்சியாகவும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது தர்மசங்கடமாக இருந்ததா? என்கிறார்கள். நடிகருக்கோ, நடிகைக்கோ நெருக்கமான காட்சியில் நடிப்பதென்பது அவர்கள் ஏற்றுக்கொண்ட வேலையின் ஒரு பகுதிதான். அப்படி நடிக்க மறுக்கக்கூடாது. இது படத்தின் தன்மையை பொருத்து இருக்கும். இயக்குனர் யார்? எதற்காக அந்த சீன் அவசியம் என்பதெல்லாம் யோசிக்க வேண்டும். தொடர்ந்து கிளு கிளுப்பான காட்சிகள் நான் நடிப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம், கதையின் தேவை மட்டும்தான். அதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
0 comments:
Post a Comment