Tuesday, March 24, 2015


kamal

கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று அவரது வீட்டில் நடைபெற்றது.

அப்போது விஸ்வரூபம்-2 படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால்தான் படம் ரிலீஸ் ஆவதற்கு தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார்களே உண்மையா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல், நிச்சயமாக எனக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் இடையில் எந்த மனஸ்தாபங்களும் இல்லை. அவர் இந்த படத்தை வெளியிடுவதற்கு ஒருசில காரணங்கள் சொல்கிறார். ஆனால், அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அவர் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை என கூறினார்.

0 comments:

Post a Comment