தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்களுக்கும் அஜித் பேவரட் தான். அந்த வகையில் சமீபத்தில் தமிகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.
அப்போது அஜித் குறித்து பல ருசிகர தகவல்களை கூறினார். இதில் ‘நான் முதன் முதலில் திரையில் தோன்றிய படம் அமர்க்களம் தான்.
இதில் அஜித் சார் வேண்டாம் என்று கூறியிருந்தால், நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, காஞ்சனா படத்தின் வெற்றிக்கு, தயாரிப்பாளர் எனக்கு ஒரு கார் பரிசளித்தார். அதை அவர் கையால் தான் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று நினைத்து வீட்டிற்கே சென்றேன். எனக்கு மிகவும் லக்கி ஸ்டார் அவர்’ என்று மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
:d
ReplyDelete