Sunday, March 1, 2015


அஜித் என்றால் தல என்று உலகத்துக்கே தெரிந்த விஷயம் தான். இதற்கு மாறாக டி.ராஜேந்தரை தல என்று குறிப்பிட்டு ஒரு குத்துப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் இப்படியொரு பாடல் இடம்பெறுகிறது.

ரோமியோ ஜூலியட் படத்தில் கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள்.

அனேகன் படத்தில் சூப்பர்ஹிட் ஆன டங்கா மாரி ஊதாரி பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிருத் பாடிய பாடல் டண்டனக்கா. அப்பாடலில்

டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலின்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் அங்க தான்டா
எங்க தல நின்னாரு என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

அனிருத், ஏற்கனவே அஜித்-56 படத்திற்கு இசையமைக்க கேட்டதற்கு ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருந்தார். தற்போது இந்த பாடலைப் பாடியதால் அஜித் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனராம்.

0 comments:

Post a Comment