நாகர்ஜுனா படத்தில் நடிக்கமுடியாது - சுருதிஹாசன் கொடுத்த ஷாக்
அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் பிரபல ஹீரோவான அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அதாவது வம்சி பைடிபள்ளி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரபலங்களான நாகார்ஜுனா மற்றும் கார்த்தி ஆகியோருடன் இணைந்து ஸ்ருதி நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில் அவர் இப்போது அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இது தான் அவர் நாகார்ஜுனாவுக்கு கொடுத்த ஷாக் ஆகும். அதற்கு காரணம் அவர் தற்போது மகேஷ் பாபுவுடன் ""ஸ்ரீமந்துடு என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் நடித்து வருவதால், ஸ்ருதியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.

0 comments:
Post a Comment