Monday, March 23, 2015


திரைப்பிரபலங்கள் பலரும் தற்போது ரசிகர்களிடம் எளிதில் தொடர்பு கொள்ள டுவிட்டர் சமூக வலைத்தளத்தை தான் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நேற்று காக்கிசட்டை படத்தின் வெற்றியை கொண்டாட டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதோ ரசிகர்களுக்கு அவர் அளித்த பதில்கள்

கேள்வி:ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?

பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.

கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?
பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.
கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்

பதில்: புதுபேட்டை.

கேள்வி: பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?

பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?
பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்.
கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?

பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.
கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?

பதில்: அவர் Complete Entertainer

என்று இதுபோல் பல கேள்விகளுக்கு மனதில் தோன்றிய பதில்களை கூறினார்.

0 comments:

Post a Comment