Thursday, March 12, 2015

ss4-600x300
ஹன்சிகா தமிழில் பிசியாக நடிக்கிறார். வாலு, உயிரே உயிரே, புலி, ரோமியோ ஜூலியட், வேட்டை மன்னன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. தமிழில் முன்னணி கதாநாயகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு போன்றோருடன் நடித்து உள்ளார்.
ஒவ்வொரு கதாநாயகர்களும் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் என்றார். இது குறித்து ஹன்சிகா கூறும்போது, விஜய் நன்றாக நடனம் ஆடக்கூடியவர். ஒவ்வொரு நாளும் அழகாகவும் தெரிகிறார்.
சூர்யாவை பொறுத்த வரை கடின உழைப்பாளி அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க மற்றவர்களும் கஷ்டப்பட வேண்டும். தனுஷிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஜெயம் ரவி பழகுவதற்கு இனிமையானவர். ஆர்யா குறும்புக்காரர். சிவகார்த்திகேயன் கலகலப்பானவர் என்றார்.

0 comments:

Post a Comment