Thursday, March 12, 2015

samantha-600x300
சமந்தா ‘கத்தி’ படத்திற்குப் பிறகு, விக்ரமுடன் இணைந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவுடனும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, இரண்டு வருடத்திற்கு முன்பு தோல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது தோல் பிரச்சனையில் இருந்து மீண்டு உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. நான் தற்போது பிட்டாக இருப்பதற்கு காரணம் என்னுடைய பயிற்சியாளர் ராஜேஷ்தான் என்று கூறியுள்ளார்.
சமந்தா பற்றி ராஜேஷ் கூறும்போது, நான் சமந்தாவிற்கு உடற்பயிற்சியாளராக கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறேன். சமந்தாவின் உடல் தோற்றம் வசீகரமானதாக மாறுவதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழ வகைகளை மட்டுமே அவர் சாப்பிடுகிறார். மேலும் பயிற்சியை மேற்கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார். எப்போதுமே காலை 5 மணிக்கே உடற்பயிற்சிக்கு தயாராகிவிடுவார். அவருடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது’ என்றார்.

0 comments:

Post a Comment