உலகம் சுற்றும் வாலிபன் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வட அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இசைநிகழ்ச்சி நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருடைய பயணத்திட்டம் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான்: தி இண்டிமேட் கான்சர்ட் டூர் (A.R. Rahman: The Intimate Concert Tour' ) என்ற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த பயணம் வரும் மே மாதம் 21ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து தொடங்கி ஜூலை 14ஆம் தேதி ரெட்மேண்ட் என்ற நகரில் முடிவடைகிறது.
வட அமெரிக்காவின் 14 நகரங்களில் நேரடி இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தவுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கான வி.ஐ.பி டிக்கெட்டுக்கள் நேற்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. வி.ஐ.பி டிக்கெட்ட்டுக்கள் வாங்குபவர்கள் ரஹ்மானுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், சிற்றுண்டி அருந்தவும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான பொது டிக்கெட்டுக்கள் விற்பனை நாளை 6ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் ரஹ்மான் சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தமிழர்களை மட்டுமின்றி உலகின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்ய உலகம் சுற்றும் வாலிபனாக கிளம்ப இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நமது வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment