Thursday, March 5, 2015


ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் நடிப்பில் நாளை மறுநாள் வெளிவர இருக்கும் 'எனக்குள் ஒருவன்' திரைப்படம் அவருடைய 25வது படம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, "எனக்குள் ஒருவன் என்னுடைய 25வது திரைப்படம். இந்திய சினிமாவில் என்னையும் ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டு, இப்போது நான் இருக்கும் பெருமைக்குரிய இடத்தை அளித்த அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் அவர்களின் உதவியாளராக திரையுலகில் நுழைந்த சித்தார்த், ஷங்கரால் அடையாளம் காணப்பட்டு 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமனார். அதன்பின்னர் ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, போன்ற பல படங்களில் சாக்லேட் பாயாக நடித்துள்ளார். பின்னர் தனது பாணியை மாற்றிகொண்டு உதயம் NH 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன் என பல்வேறு மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து தற்போது எனக்குள் ஒருவன் படத்தில் இருவேடங்களில் நடித்ததன் மூலம் ஒரு முழுமையான நடிகராக மாறிவிட்டதாக கூறப்படுகிறது

0 comments:

Post a Comment