Thursday, March 5, 2015


ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் குணசித்திர நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கவும், அதில் ஹீரோயினாக அவரே நடிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய படத்தின் இயக்குனர் பணியை ஏற்பதுடன் முதன்முதலில் தான் இயக்கும் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும்  50 வயது பெண்ணாகவும் மிகவும் வித்தியாசமான கேரக்டராக இருக்கும் இந்த வேடத்தில் நடிப்பது தனக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தான் அறிந்திருந்தும், சவாலை ஏற்க தயாராகவுள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் தன்னுடன் நடித்திருந்த சுப்புலட்சுமி பாட்டி இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக கூறிய லட்சுமி, மேலும் ஒரு 24 வயது ஆண் கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டருக்கு இன்னும் நடிகரை தேர்வு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment