Thursday, March 5, 2015


இனிது இனிது' படத்தில் அறிமுகமான நடிகை ரேஷ்மி தற்போது நட்பதிகாரம், உறுமீன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மூன்றாவது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் தான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது முதல் படம் போலவே நட்பதிகாரம் படத்தில் நட்பு மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்றும், இரண்டு ஜோடிகளுக்கு இடையே நடைபெறும் உணர்ச்சி போராட்டம்தான் கதையின் முக்கிய அம்சம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வல்லினம் நாயகன் அம்ஜத்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறிப்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பு நாட்களை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உறுமீன் படம் குறித்து கருத்து கூறிய ரேஷ்மி, 'இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் என்றும், பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கும் தனக்கு ஐ.டியில் பணிபுரியும் பெண் கேரக்டர் என்றும் கூறியுள்ளார்.

நட்பதிகாரம் படத்தை ரவிச்சந்திரன் என்பவரும் உறுமீன் படத்தை சக்திவேல் பெருமாள்சாமி என்பவரும் இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment