தெலுங்கு படவுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுக்கு இரண்டாவது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சிரஞ்சிவியின் மகள் ஸ்ரீஜா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர், தான் காதலித்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரை தந்தை சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய ஸ்ரீஜா, பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தையுடன் அமெரிக்கா சென்றார். தற்போது அவர் மீண்டும் தந்தை சிரஞ்சீவி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளதாகவும், குடும்பத்தினர்களுடன் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகளுக்கு மறுமணம் செய்து வைக்க சிரஞ்சீவி முடிவு செய்திருப்பதாகவும், அவருக்கு பொருத்தமான வரனை பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் டோலிவுட்டில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment