Thursday, March 5, 2015


கடந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்களில் மிகவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்த படங்களில் ஒன்று 'குவீன்'. கங்கனா ரனாவத் நடித்த இந்த படம் ஆறு பிலிம்பேர் விருதுகளை வென்றதோடு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் நல்ல வசூலை கொடுத்த படமாகவும் விளங்கியது.

இந்நிலையில் இந்த படத்தின் தென்னக உரிமையை நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் பெற்றுள்ளார். இந்த படத்தை அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கவும், நான்கு மொழிகளிலும் நடிக்க ஒரே நடிகையை தேர்வு செய்யவும் அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கங்கனா ரனாவத் கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய தியாகராஜன், தற்போது 'ஓ காதல் கண்மணி' நாயகி நித்யா மேனனிடம் பேசி வருவதாகவும், 'குவீன்' படத்தின் நான்கு மொழி ரீமேக்கிலும் நடிக்க நித்யா மேனன் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நித்யா மேனன், 'மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓ காதல் கண்மணி, ரிலீஸானால் தமிழிலும் முன்னணி நடிகையின் வரிசையில் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை தியாகராஜன் புக் செய்வாரா அல்லது வேறு நடிகையை புக் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment