Tuesday, March 3, 2015

கமலும் தற்போது அரசியல் களத்தில் - Cineulagam
உலக நாயகன் கமல்ஹாசன் எப்போதுன் தான் அரசியலும் வரப்போவதில்லை என்று கூறினார். இந்நிலையில் இவரது நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள் ரிலிஸ்க்கு வரிசை கட்டி நிற்கின்றன.
தற்போது வந்த தகவலின் படி பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து கமல் ஒரு படத்தை தன் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிக்கவுள்ளாராம். மேலும் இந்த படம் அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக பணமாற்றம் செய்யும் முறையை விறுவிறுப்புடன் கூடிய கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படத்தை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கி ஐந்தே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment