அமீரின் 'ஆதிபகவன்', சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' படங்களை அடுத்து ஜெயம் ரவி தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். 'ரோமியோ ஜூலியட்', தனியொருவன்', அப்பாடக்கர் ஆகிய மூன்று படங்களிலும் பிசியாக இருக்கும் ஜெயம் ரவி தற்போது நான்காவதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தை இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் கதை போலவே இந்த படத்தின் கதையும் மிகவும் வித்தியாசமான கோணத்தில் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனர் தரவுள்ளதாகவும் இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment