'கவலை வேண்டாம்' ஜீவா. கூறுகிறார் யாமிருக்க பயமே இயக்குனர்
நடிகர் ஜீவா மிகவும் ரிஸ்க் எடுத்திருந்து நடித்திருந்த 'யான்' படம் சரியாக போகாததால் கவலையுடன் இருந்த அவருக்கு 'கவலை வேண்டாம்' என்று ஆறுதல் கூற வந்துள்ளார் யாமிருக்க பயமே' பட இயக்குனர் டீகே. ஆம் ஜீவாவின் அடுத்த படத்தின் டைட்டில் 'கவலை வேண்டாம்' என்பதுதான்.
பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நிறுவனமானஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மெண்ட் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் ஜிகர்தண்டா புகழ் பாபிசிம்ஹாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
யாமிருக்க பயமே' படத்திற்கு இசையமைத்த எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் எடிட்டராகவும், அந்தோணி எல்.ரூபன் எடிட்டராகவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் செந்தில் கலை இயக்குனராகவும், பிருந்தா மற்றும் விஜி நடன இயக்குனர்களாகவும் இந்த படத்தில் பணிபுரியவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லியின் தயாரிப்பிலும் ஜீவா ஒரு புதிய படத்தில் ஜீவா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். எனவே யான்' தோல்வி குறித்து கவலைப்படாமல் 'கவலை வேண்டாம்' படத்திலும், அட்லி படத்திலும் நடிக்க ஜீவா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment