சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படம் நேற்றோடு 25வது நாளை எட்டியுள்ளது. அதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு அதற்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்களும்…
நீங்க விஜய் சார் நிகழ்ச்சியை நடத்தும் போது என்ன நினைச்சிருக்கீங்க ?
அவர் கூட மூணு முறை நிகழ்ச்சி பண்ணியிருக்கேன், படபடப்பா இருக்கும்.

தல அஜித் பத்தி சொல்லுங்க, அவர் கிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டீங்க ?
தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை.
விஜய் ரசிகர்கள்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கணும், உங்க மிமிக்ரில அவரை ரொம்ப கிண்டல் பண்ணியிருக்கீங்க…
அதெல்லாம் நான் எப்பவோ பண்ணது. அதுவும் அதெல்லாம் வேணும்னே பண்ணது இல்லை. சினிமாவுக்கு வந்த பிறகுதான் அதனால வர்ற பிரச்சனைகள் எனக்குப் புரிஞ்சுது.

அஜித் சார் கூட எப்ப படம் பண்ணுவீங்க?
அடுத்த யோசனையே கிடையாது, எந்த டிமாண்ட்டும் பண்ண மாட்டேன், நேரா ஷுட்டிங் கிளம்பிடுவேன்.

உங்க வாழ்க்கையில மிகச் சிறந்த தருணம் எது?
விஜய் சார் கையால, விஜய் அவார்ட்ஸ் வாங்கினதும், அதை எங்க அப்பாவுக்காக சமர்ப்பிச்சதும்…

விக்ரம் ‘ஐ’ படம் பற்றி…
அவர் ‘டெர்ரிஃபிக்’….
அவர் ‘டெர்ரிஃபிக்’….
தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி எப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சீங்க?
‘தளபதி’ படத்துல இருந்து.
‘தளபதி’ படத்துல இருந்து.
தனுஷ் பத்தி சில வார்த்தை…
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்.
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்.
சூர்யா பற்றி சில வார்த்தைகள்… அவர் கிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டீங்க?
கடின உழைப்பு, ஒரு மனிதனுடைய வாழ்க்கையையே மாற்றிடும்.

நீங்க விஜய் சாரை இமிடேட் பண்றதா சொல்றாங்க?
நான் இப்பதான் கத்துக்கிட்டு வர்றேன். அவருடைய நடனத்தை சின்ன வயசுல இருந்து பார்த்துக்கிட்டு வர்றேன், அதுவும் காரணமா இருக்கலாம். என்னுடைய சொந்த ஸ்டைல்ல பண்ணணும்னு முயற்சி பண்ணிட்டு வர்றேன், அதுக்கு கடினமா உழைச்சிக்கிட்டு இருக்கேன்.

டிவிட்டர் ரசிகர்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க…
அவங்க கொடுத்த வரவேற்பைப் பார்த்து மெர்சலாயிட்டேன்.

உங்களுக்கும் சிம்புவுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு எப்பவும் ஒரு வதந்தி இருக்கு. அதை இப்பவாவது கிளியர் பண்ணுங்க…
யார் கூடவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டிவியில இருந்து என்னைப் பார்த்துட்டு வர்றீங்க. எல்லா பேட்டிகளையும் பார்க்கறீங்க. நான் யாரைப் பத்தியும் பேசினதில்லை. ஒரு ஸ்டாரா அவரை நான் மதிக்கிறேன்.

0 comments:
Post a Comment