முன்னணி நடிகர்கள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டுத்தான் அடுத்தப்படத்தில் நடிப்பது என்ற கொள்கையை வைத்துள்ளனர். வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்தப் படத்தில் நடி என்று அட்வைஸ் பண்ணினாராம் தனுஷ்.
சினிமாவில் நடிகராக அறிமுகமானபோது ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திற்குப் பிறகு ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்ற ரூட்டுக்கு வந்துவிட்டார். எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் என ஒன் பை ஒன்னாக நடித்து வருகிறார்.
காக்கி சட்டை படம் சமீபத்தில் ரிலீஸானநிலையில் தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படி திட்டமிட்டு கால்ஷீட் கொடுத்து கல்லாக்கட்டி வரும் சிவகார்த்திகேயன் தற்போது தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாராம். காரணம், ரஜினி முருகன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷுக்கு அம்மைப்போட்டிருப்பதால் ரஜினி முருகன் படப்பிடிப்பு தற்போது கேன்சல் செய்யப்பட்டிருக்கிறதாம்.
அம்மையின் தாக்கத்தால் கீர்த்தி சுரேஷின் முகத்தில் அம்மை தழும்புகள் ஏற்பட்டுவிட்டதாம். தழும்புகள் மறைந்து அவர் மறுபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒன்றரை மாதங்களாகிவிடுமாம். அதுவரை வேறு படத்திலும் நடிக்க முடியாது.
கீர்த்தி சுரேஷை நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை கமிட் பண்ணி ரஜினி முருகன் படத்தை முடிக்க சொல்லலாமா? அல்லது ரஜினி முருகன் படத்தை பெண்டிங்கில் வைத்துவிட்டு அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்கச் சொல்லலாமா?
என்றும், தனுஷ் பேச்சைக் கேட்டது தப்போ? ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வந்திருந்தால் இப்படி வீட்டில் முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காதே? என்றும் குழப்பத்தில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
என்றும், தனுஷ் பேச்சைக் கேட்டது தப்போ? ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வந்திருந்தால் இப்படி வீட்டில் முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காதே? என்றும் குழப்பத்தில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
.jpeg)
0 comments:
Post a Comment