இந்த வாரமும் 6 புதுப்படங்கள்..
கடந்த வாரம் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியான படம் அது. வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில், சென்னையின் நுழைவாயிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற அரங்குக்கு சென்றிருந்தோம். நம்ப மாட்டீர்கள், வெறும் 22 பேர்தான் அரங்குக்குள் இருந்தனர். படம் ஆரம்பமாகிவிட்டது. மேட்னி! வெளியாகும் புதுப்படங்களின் நிலை அப்படியாகிவிட்டது. சிறு படங்கள், சுமார் பட்ஜெட் படங்கள் என்ற பெயரில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக வெளியாகும் புதுப் படங்கள், செவ்வாய்க் கிழமையன்றே காலியாகிவிடுவதுதான் இன்றைய நிலை.
பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால், ரசிகர்கள் என்ற பெயரில் அந்தப் படங்களைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பி, கூட்டமே இல்லாமல் செய்துவிடும் நிலையும் தொடர்கிறது. இந்த சிக்கல்களை உண்மையிலேயே தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்தவும் ஆரம்பித்துள்ளனர். உதாரணம், நேற்று தயாரிப்பாளர் சங்கம் முன் ஒரு இயக்குநர் நடத்திய போராட்டம்.
இப்படியொரு சூழலில் இன்று ஆறு புதிய படங்கள் வெளியாகியுள்ளன. Read more

0 comments:
Post a Comment