Tuesday, March 24, 2015


தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்துடன் பூனம் பாஜ்வா நடித்து வந்த படம் எதிரி எண் 3. அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. அதனால் அதன்பிறகு பூனம் பாஜ்வாவை யாரும் கண்டுகொள்ளாததால் மலையாளத்துக்கு சென்று சில படங்களில் நடித்த அவர், தற்போது ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து, இனிமேல் தான் படுகவர்ச்சியாக நடிக்க இருப்பதாக அவர் கோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார். இருப்பினும், அதை வாயால் மட்டுமே சொல்வதை விட செயலில் காண்பித்தால்தான் நம்புவார்கள் என்பதால், இப்போது சினிமா நிகழ்ச்சிகளுக்கு குட்டை பாவாடை அணிந்து கவர்ச்சி காண்பித்தபடி விசிட் அடிக்கிறார் பூனம் பாஜ்வா.

மேலும், பட விசயமாக தன்னை தொடர்பு கொண்டவர்களிடமும், எக்குத்தப்பாக சமபளத்தை கேட்காமல், தயாரிப்பாளர்களாக முடிவு செய்வதை ஏற்றுக்கொள்ளும் பூனம் பாஜ்வா, கவர்ச்சியில் உச்சத்தை தொட நான் ரெடி என்று அடித்து சொல்கிறாராம். அதேசமயம், பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு முதலிடம் கொடுப்பது என்கிற கண்டிசனில் இப்போதும் உறுதியாகவே இருந்து வருகிறார். குறிப்பாக, இரண்டொரு படங்களில நடித்த ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று அவரை கேட்டால், நேரடியாக மறுப்பை சொல்லாமல், நான் ரொம்ப பிசி அப்புறம் பார்க்கலாம் என்று கழண்டு கொள்கிறாராம் பூனம் பாஜ்வா.

0 comments:

Post a Comment