Tuesday, March 10, 2015

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்' படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க முதலில் சித்தார்த், சமந்தாவிடம் பேசப்பட்டது. அப்போது அவர்கள் காதலர்கள். இதனால் இருவருமே நடிக்க ஓகே சொன்னார்கள். இதற்கிடையில் இருவருக்குள் ஏற்பட்ட மனவருத்தத்தால் பிரிந்தனர். இனி சேர்ந்து நடிக்க கூடாது என்றும் முடிவு செய்தனர். இதனால் அப்படத்தில் நடிக்க முடியாது என இருவருமே விலகிவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஆர்யா, ஸ்ரீதிவ்யா, ராணா, பாபி சிம்ஹா, சர்வானந்த், நித்யா மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்க உள்ளது. தற்போது இந்த தேர்வில் புதிதாக இணைந்திருக்கிறார் நயன்தாரா. அவரிடம் பட தரப்பில் பேச்சு நடந்து வருகிறது.

படத்திற்கான பட்ஜெட் அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப பிரபல நட்சத்திரங்களை நடிக்க வைத்தால்தான் எதிர்பார்க்கும் அளவுக்கு வியாபாரமும் இருக்கும் என தயாரிப்பாளர்கள் கருதுவதால் நட்சத்திர தேர்வில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் சிவா இயக்கும் அஜீத் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. அவரது கால்ஷீட் பிரச்னையாக உள்ளதாம். அவர் நடிக்கவில்லையென்றால் நயன்தாராவை ஒப்பந்தம் செய்யவும் முயற்சிகள் நடக்கிறது. இதனால் ஆர்யாவுடன் ' பெங்களூர் டேஸ்' ரீமேக் படத்தில் நடிக்க சென்றால், அஜீத் படத்தை மிஸ் செய்ய வேண்டிய நிலை வரலாம் என நயன்தாரா யோசிக்கிறாராம். இதையடுத்து ரீமேக் படத்தில் நடிக்க பதில் ஏதும் சொல்லாமல் அப்பட யூனிட்டை காக்க வைத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment