கமல் ஹாசன் நடித்துவரும் பாபநாசம் படத்துக்கு ஏற்பட்ட தடை நீங்கியிருப்பதால் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெறுகிறது.
மலையாள த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் கமல் ஜோடியாக கௌதமி நடித்துள்ளார். ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்கி வருகிறார். அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி முடியும் பச்சத்தில் இப்படம் வரும் மே இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

0 comments:
Post a Comment