Tuesday, March 24, 2015

லிங்காவைத் தொடர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஜினியை அடுத்து முருகதாஸ் இயக்குவார் எனவும் இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை கிரேஸி மோகனிடம் எழுதசொல்லி கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment