Tuesday, March 24, 2015

ஈராஸ் நிறுவனம் வளைத்து வளைத்து படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது. லிங்கா ரிலீஸ் தொடர்ந்து உத்தமவில்லன் படமும் ஈராஸ் ரிலீஸ்தான். இந்த நிறுவனத்தின் தென்னக சிஇஓ வாக ரஜினி மகள் சவுந்தர்யா அஸ்வின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன்தான் இந்த அதிரடி அட்டகாசம். தமிழ்சினிமாவில் உருவாகி வரும் பெரிய படங்கள் எல்லாவற்றையும் வாங்கி வெளியிடுவது… முன்னணி நடிகர்களின் பட ஆடியோக்களை வாங்குவது என்று சவுந்தர்யாவின் செயல்பாடுகள் ஈராசுக்கு ரொம்பவே திருப்தி.
இருந்தாலும் வெளியுலகம் தெரியாத குழந்தைதானே? என்பதை அவரே நிரூபித்திருக்கிறார் ஓரிடத்தில். அந்த தவறை சிரித்தபடியே சரி செய்து அனுப்பினார் அந்த பெரியவர். ஏனென்றால் அந்த பெரியவர் ரஜினியின் நெருங்கிய நண்பர். பிரபல விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். அவர்தான் ஆனந்தா எல் சுரேஷ்.
கடந்த வாரம் இவரது அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த சவுந்தர்யா, என்ன அங்கிள்… பாபநாசம் படம் முடிஞ்சுருச்சுன்னு கேள்விப்பட்டேன். இன்னும் பிசினஸ் பேசலையா? நீங்க சரின்னா நம்ம ஈராஸ்ல பேசலாமே என்றாராம். திடுக்கிட்டு போனார் ஆனந்தா எல் சுரேஷ். ஏன்? அந்த படத்தை தயாரிப்பது இந்த சுரேஷ் இல்லை. அவர் சுரேஷ் பாலாஜி. இந்த விஷயத்தை சவுந்தர்யாவுக்கு எடுத்து சொன்ன ஆனந்தா எல் சுரேஷ், நம் இந்த செய்திக்கு வைத்திருக்கும் தலைப்பை அப்படியே பேசி, அன்போடு அனுப்பி வைத்தாராம்.
முதலாளி லெவலில் இருப்பவர்கள் தனக்கு கீழே இருக்கும் தொழிலாளர்களோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை என்றால் இப்படிதான்!

0 comments:

Post a Comment